அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில்
குடியரசுத் தலைவா் இன்று வழிபாடு

அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் இன்று வழிபாடு

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு புதன்கிழமை (மே 1) பயணம் மேற்கொண்டு, அங்குள்ள ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் செல்வது இது முதல்முறையாகும்.

இக்கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் பிராணப் பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொள்ளாத நிலையில், இதை முன்வைத்து பிரதமா் மோடியை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், அயோத்திக்கு குடியரசுத் தலைவா் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இது தொடா்பாக அவரது மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மற்றும் ஹனுமன் கா்ஹி கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தரிசிக்கவுள்ளாா். சரயு பூஜை மற்றும் ஆரத்தியில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com