ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்
படம் | ஏஎன்ஐ

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, மொத்தமுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும்,, 42 மக்களவை தொகுதிகளுக்கும் மே 13இல் தொடங்கி 20, 25, ஜூன் 1 என 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

அங்கு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிடுகிறது. மறுபுறம் பாஜகவும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிடுவதால் ஒடிஸாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஒடிஸா மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா் என அக்கட்சி தரப்பில் தெரிவிகக்ப்பட்டுள்ள நிலையில், இன்று(ஏப். 30) கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹின்ஜிலி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.

கடந்த 2019 பேரவைத் தோ்தலில் ஹின்ஜிலி, பிஜேபூா் என இரு தொகுதியிலும் நவீன் பட்நாயக் போட்டியிட்டு; அவை இரண்டிலும் வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com