இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற தினேஷ் குமார் திரிபாதிக்கு (இடது) வாழ்த்து தெரிவித்த ஆர்.ஹரிகுமார்.
இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற தினேஷ் குமார் திரிபாதிக்கு (இடது) வாழ்த்து தெரிவித்த ஆர்.ஹரிகுமார்.

புது தில்லி: இந்திய கடற்படையின் 26-ஆவது தலைமைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஆர்.ஹரிகுமார் 40 ஆண்டுகால பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமிக்கப்பட்டார்.

கடற்படையில் 39 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இவர், தலைமைத் தளபதி நியமனத்துக்கு முன்னதாக கடற்படை அதிகாரிகளுக்கான துணைத் தலைமைத் தளபதியாகவும் மேற்கு கடற்படை பிரிவு தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

செங்கடல், ஏடன் வளைகுடா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கடல் வழித்தடங்களில் ஹூதி பயங்கரவாத அமைப்பினரால் சரக்குக் கப்பல்கள் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வரும் தற்போதைய சூழலில், இந்திய கடற்படையின் 26-ஆவது தலைமைத் தளபதியாக திரிபாதி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைத் தளபதி திரிபாதி கூறுகையில், "தற்போதைய மற்றும் வளரும் சவால்களால் கடலில் ஏற்படக் கூடிய சாத்தியமான பிரச்னைகளைத் தடுக்கவும் போரில் வெல்வதற்கும் இந்திய கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அதையொட்டியே எனது கூடுதல் கவனமும் முயற்சியும் இருக்கும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com