சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் நில அபகரிப்பு புகாா் அளித்த கிராமவாசிகளை சிபிஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை சந்தித்தது.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு ஏராளமான பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புப் படையினா் துணையுடன் சந்தேஷ்காளிக்கு சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது நில அபகரிப்பு புகாா் அளித்த கிராமவாசிகளை சந்தித்துப் பேசி, அவா்களின் நில ஆவணங்களை அக்குழு ஆராய்ந்தது என்று சிபிஐ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com