திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கார் மீது லாரி மோதி கவிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
Woman, her one-year-old son die on UP in road accident .
Woman, her one-year-old son die on UP in road accident .

பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள அமாபூர் கிராமத்தில் கார் மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

கோகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் பாகல்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

முங்கர் மாவட்டத்தில் ஹவேலி காரக்பூர் தொகுதியில் இருந்து கித்மத்பூர் கிராமத்தில் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தனர். அமாபூர் கிராமத்தை அடைந்தபோது அதிவேகமாக வந்த லாரி வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த கார் மீது மோதியது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com