குற்றச்சாட்டு வைத்தால் மட்டும் போதாது.. : அஸ்வினி வைஷ்ணவ்

எதிர்க்கட்சி எம்.பிக்களின் அலைபேசி கண்காணிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்காதது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

புது தில்லி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குற்றச்சாட்டு முன்வைத்த எதிர்க்கட்சி எம்.பியிடம் அவரது அலைபேசியை ஒப்படைக்குமாறும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு எதிர்க்கட்சி எம்.பிக்களின் அலைபேசி அரசால் கண்காணிக்கப்படுவதாக அனுப்பிய குறுஞ்செய்தி குறித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது குறித்து பிரியங்கா சதுர்வேதி மக்களவையில் கேள்வி எழுப்பினார். அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பி நான்கு மாதங்கள் ஆனபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சதுர்வேதி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அஸ்வினி வைஷ்ணவ்,  “குற்றச்சாட்டு முன்வைப்பது மட்டும் போதாது. குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் சட்ட அமைப்புகளுக்கு நடவடிக்கை எடுக்க போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களது மொபைலை ஒப்படையுங்கள், தகவல்களைத் தெரிவியுங்கள், தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் பரிசோதிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com