அகமதாபாத்தைக் கண்காணிக்கும் செய்யறிவு தொழில்நுட்பம்!

அகமதாபாத்தின் போக்குவரத்து மற்றும் நகர்புற கண்காணிப்புகளுக்கு செய்யறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

அகமதாபாத்தின் போக்குவரத்து மற்றும் நகர்புற கண்காணிப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்தியாவிலேயே முதல்முறையாக செய்யறிவு தொழில்நுட்பத்தை நகராட்சி மற்றும் காவல்துறை கண்காணிப்புகளுக்கு அகமதாபாத் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பம் மூலம் அகமதாபாத்தின் 460 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கண்காணிக்கப்படுவதாக தெரிகிறது. நேரடி டிரோன் காணொலிகள், பேருந்திலுள்ள சிசிடிவி காணொலிகள், போக்குவரத்து கண்காணிப்பு கேமராவின் காணொளிகள் போன்றவற்றை இந்த தொழில்நுட்பம் கையாள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தொலைந்துபோன நபர்களைத் தேடுதல், சாலை விதிகளை மீறுபவர்களைக் கண்டறிதல், சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளைக் கண்காணித்தல், குப்பை மேலாண்மையில் ஏற்படும் தவறுகள் போன்றவற்றில் திறம்பட செயல்படலாம் என செய்யறிவு தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com