2016-ல் காணாமல் போன விமானப் படை விமான பாகங்கள் கண்டுபிடிப்பு

இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


2016ஆம் ஆண்டு 29 பேருடன் சென்று வங்கக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தேசிய கடல் தொழில்நுட்ப பையம், கடலுக்கடியில் தேடும் இயந்திரத்தைக் கொண்டு தேடி வந்ததில், சென்னைக் கடற்கரையிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் சேதமடைந்த விமானப் படை விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனார் என்றழைக்கப்படும் கருவியில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேடுதல் பணி நடைபெற்றதில் 3,400 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுளள்தாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி வங்கக் கடல் மீது பறந்துகொண்டிருந்த ஏஎன்-32 இரட்டை எஞ்ஜின் விமானம் காணாமல் போனது. தாம்பரம் விமானப் படை நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்ட விமானம் போர்ட் பிளேருக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், நடுவழியில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com