அவமதிக்க முயன்ற இளைஞர்... பலியான அவலம்: நிஹாங் சீக்கியர் கைது

சீக்கியர்களின் புனித தலத்தை அவமதிக்க முயன்ற இளைஞர் பலியாகியுள்ளார்.
அவமதிக்க முயன்ற இளைஞர்... பலியான அவலம்: நிஹாங் சீக்கியர் கைது

பக்வாரா: சீக்கியர்களின் வழிப்பாட்டுத்தலத்தை அவமதிக்க முயன்றதாக கூறப்படும் இளைஞரைக் கொலை செய்ததாக நிஹாங் சீக்கியர் ஒருவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

நிஹாங் ராமன்தீப் சிங், ஒரு இளைஞரைக் கொலை செய்வதற்கு முன்பாக, எடுக்கப்பட்ட அந்த இளைஞரின் விடியோவை பதிவேற்றியுள்ளார்.

அதில் தான் புனிதத்தலத்தை அவமதிக்கும் நோக்கில் அனுப்பபட்டதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். கொலை செய்தது குறித்தும் சிங் சிறிய காணொலி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கொலை நடைபெற்ற குருத்வாராவுக்கு பலியான இளைஞர் இரவு 10 மணிக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள கழிவறையில் மறைந்து இருந்துள்ளார். அவரின் இருப்பை உணர்ந்த குருத்வாராவின் காப்பாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கு சோதிக்க சென்றனர். அவர்கள் வலியுறுத்தியும் வெளியே வரமறுத்த இளைஞரை காப்பாளர்கள் வெளியே இழுத்து வந்துள்ளனர்.

குருத்வாராவை அவமதிக்கும் காரியத்தைச் செய்ய தன்னை அனுப்பியதாக இளைஞர் அங்குள்ளவர்களின் விசாரணைக்கு பதிலளித்துள்ளார். விடியோவில் அது பதிவாகியுள்ளது.

இரண்டு காப்பாளர்கள் காவல்நிலையத்துக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க சென்றுள்ளனர். இந்த வேளையில் நிஹாங் அந்த இளைஞரைக் கொன்றுள்ளார்.

நிஹாங்கை காவலர்கள் கைது செய்துள்ளனர். நிஹாங் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிஹாங்கின் உதவியாளர்கள் தற்காப்புக்காக தான் அவர் அந்தக் காரியத்தை செய்ய வேண்டியிருந்ததாகவும் இறந்த இளைஞர்தான் முதலில் தாக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீக்கியர்களின் புனிதத்தலங்களை இழிவுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து பஞ்சாப்பில் பதிவாகி வருகின்றன..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com