ஜார்க்கண்ட் பள்ளியில் 2 ஆசிரியர்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட்டின், கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2 ஆசிரியர்களை சக ஆசிரியரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஜார்க்கண்ட் பள்ளியில் 2 ஆசிரியர்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட்டின், கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2 ஆசிரியர்களை சக ஆசிரியரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஞ்சியில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள பொரையாஹ்ட் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

இரண்டு ஆசிரியர்களை கூடுவதற்கு முன்னதாக ஆசிரியர் தன்னைத்தானே சுட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கோடா காவல் கண்காணிப்பாளர், 

பெண் ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் பலத்த காயத்துடன் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இரண்டு ஆசிரியர்களையும் சக ஆசிரியர் சுட்டுக் கொன்றதன் பின்னணி என்ன என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com