ஈரானியப் புத்தாண்டு: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

பாரசீக புத்தாண்டைக் குறிக்கும் சர்வதேச நவ்ரூஸ் தினம் 2024 இன்று கொண்டாடப்படுகிறது.
ஈரானியப் புத்தாண்டு நவ்ரூஸ்
ஈரானியப் புத்தாண்டு நவ்ரூஸ்

நவ்ரூஸ், ஈரானியப் புத்தாண்டு தினமான இன்று(மார்ச் 19) கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு கூகுள் சிறப்பித்துள்ளது.

நவ்ரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும். நவ்ரூஸ் என்ற சொல்லுக்கு "புது நாள்" என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தினத்தைக் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் நவ்ரூஸ் அதாவது வழக்கமாகப் பனிப்பொழிவைச் சந்தித்துவரும் நாடுகளுக்கு வெயில் காலம் தொடங்குவதைக் கொண்டாடப்படும் பண்டைய கால ஈரானிய பண்டிகையாகும்.

பெரும்பாலான நாடுகளில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்படும். ஆனால் ஒரு சில நாடுகளில் அந்த நாட்டிற்கு ஏற்றார்போல் மாற்றுத் தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பாரசீக புத்தாண்டைக் குறிக்கும் சர்வதேச நவ்ரூஸ் தினம் 2024 இன்று கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புத் தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுள்ளது.

அந்த டூடுலில் மலர் வடிவங்கள், பாரம்பரிய முத்து மற்றும் நவ்ரூஸ் டேபிள் போன்ற பொருள்கள் உள்பட பாரசீக கலாசாரத்தின் கூறுகளைக் கொண்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் தனது செய்திக்குறிப்பில் இந்த நாளில் உண்ணப்படும் உணவுகளை வர்ணித்து, அதிர்ஷ்டத்திற்குக் கோதுமை, வலிமைக்குக் கோதுமை புட்டு, காதலுக்கு ஆலிவ் ஆயில், சூரிய உதயத்திற்கு பெர்ரி, பொறுமைக்கு வினிகர், அழகுக்கு ஆப்பிள், நல்ல ஆரோக்கியத்திற்கு பூண்டு ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிட்டு இனிய நவ்ரூஸ் வாத்துக்கள் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com