ஹிமாசல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் ஐக்கியம்

மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஹிமாசல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் ஐக்கியம்

ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலின்போது அங்கு , காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்காமல், பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜனுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடா்ந்து மாநில பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காமல் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக 6 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து மாநில சட்டப்பேரவைத் தலைவா் குல்தீப் சிங் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக அவர்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட சுதீா் சா்மா, ராஜிந்தா் ராணா, இந்தா்தத் லக்கன்பால், தேவிந்தா் குமாா், ரவீந்திர தாக்குா், சைதன்ய சா்மா ஆகிய 6 பேரும் இன்று(மார்ச். 23) பாஜகவில் இணைந்துள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாஜகவில் இணைந்தனர்.

தற்போது ஹிமாசல பிரதேச சட்டப்பேரவையில் 34 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 25 பாஜக எம்.எல்.ஏ.க்கள், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com