குஜராத் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல்!

குஜராத் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தலுடன் மே 7ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

மக்களவைத் தேர்தலுடன் மே 7ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜிநாமா செய்தபின் காலியாக உள்ள இடங்களுக்கு வேட்பாளர்களைக் கட்சி வெளியிட்டது.

டாக்டர்.சி.ஜே. சாவ்தா விஜாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அர்ஜூன் மோத்வாடியா -போர்பந்தர், அரவிந்த் லதானி-மானவ்தார் தொகுதி, சிராக் படேல்-காம்பத், தர்மேந்திரசிங் வகேலா- வகோடியா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அர்ஜூன் மோத்வாடியா ராஜிநாமா செய்த நிலையில் குஜராத் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.

சுயேச்சை எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் சேர்ந்த தர்மேந்திர சிங் வகேலாவைத் தவிர, மற்ற நான்று வேட்பாளர்களும் முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களாக பதவி வகித்தனர். இவர்களின் ஒட்டுமொத்த ராஜிநாமா இடைத்தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com