காங்கிரஸிலிருந்து விலகினார் ஹரியானா முன்னாள் அமைச்சர் சாவித்திரி ஜிந்தால்!

ஹரியாணா முன்னாள் அமைச்சர் சாவித்திரி ஜிந்தால் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகினார் ஹரியானா முன்னாள் அமைச்சர் சாவித்திரி ஜிந்தால்!

ஹரியாணா முன்னாள் அமைச்சர் சாவித்திரி ஜிந்தால் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.

84 வயதான சாவித்ரி ஜிந்தால், காங்கிரஸில் இருந்து விலகுவதாக புதன்கிழமை இரவு சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார்.

அவர் பதிவில், நான் 10 ஆண்டுகளாக ஹிசார் மக்களவைத் தொகுதியில் எம்எல்ஏவாகவும், ஹரியாணா மாநில முன்னாள் அமைச்சராகவும் தன்னலமின்றி பணியாற்றினேன்.

ஹிசார் மக்கள் எனது குடும்பம், எனது குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில் இன்று காங்கிரஸிலிருந்து விலகுவதாக அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் எம்பியான இவரது மகன் நவீன் ஜிந்தாலும், காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.

பிரபல தொழிலதிபரும், ஹரியாணா முன்னாள் அமைச்சர் சாவித்திரி ஜிந்தாலின் மகன் நவீன், குருஷேத்ரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com