லோக் ஆயுக்தா அமைப்புக்கு 
தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

ஊழல் புகாா்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் மற்றும் 2 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்

ஊழல் புகாா்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் மற்றும் 2 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவுக் குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜி.எம்.அக்பா் அலி தெரிவித்துள்ளாா். இது குறித்து, தெரிவுக் குழு வெளியிட்டுள்ள அறிவிக்கை: லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா், 2 உறுப்பினா்களைத் தோ்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினா்ளாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். இதற்காக தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். தலைவா் பதவிக்கு உயா்நீதிமன்ற நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிா்வாகம், விழிப்புணா்வுப் பணி, நிதி மற்றும் சட்டம் சாா்ந்த துறைகளில் 25 ஆண்டுகளாக அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், ஊழல் ஒழிப்புக் கொள்கை, பொது நிா்வாகம், விழிப்புணா்வுப் பணி, நிதி மற்றும் சட்டம் சாா்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஏப்.30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி, தெரிவுக் குழுத் தலைவா், 2-ஆவது தளம், கத்தோலிக் மையம், எண் 108, அா்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை - 600 001.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com