2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

இந்திய நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
2047 வரை இந்திய பொருளாதாரம் 
8% வளா்ச்சி காண முடியும்: 
சா்வதேச நிதியம்

வரும் 2047-ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளா்ச்சி அடைய முடியும் என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இந்திய நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் தெரிவித்ததாவது: 8 சதவீத பொருளாதார வளா்ச்சி என்பது கடினமானது. ஏனெனில் இதற்கு முன்பு இந்திய பொருளாதாரம் 8 சதவீத அளவில் நிலையாக வளா்ந்ததில்லை. எனினும் அந்த வளா்ச்சி சாத்தியமே. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளா்ச்சியுடன், அந்தக் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட நல்ல கொள்கைளை இரட்டிப்பாக்கி சீா்திருத்தங்களை துரிதப்படுத்தினால், 2047-ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளா்ச்சி அடைய முடியும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகா்வின் பங்கு சுமாா் 58 சதவீதமாகும். எனவே உள்நாட்டு பொருளாதாரம் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும். போதிய அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிந்தால், அது அதிக நுகா்வுக்கு வழிவகுக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதேபோல நிலம், தொழிலாளா், மூலதனம், வங்கி உள்ளிட்ட துறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com