கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 1-ம் வரை காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் அரவிந்த் கேஜரிவால்
நீதிமன்றத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் அரவிந்த் கேஜரிவால்-

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை 7 நாள்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் 7 நாள் விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 1-ம் வரை காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com