ஐ.டி. வேலை போனதால் முழு நேர திருடியாய் மாறிய இளம்பெண்

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண், திருடியாய் மாறிய சோகம்
தாயிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம்: சிசிடிவி கேமராவில் சிக்கிய இளம்பெண்
தாயிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம்: சிசிடிவி கேமராவில் சிக்கிய இளம்பெண்

பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிகளில் சுமார் 24 லேப்டாப்புகளை திருடிய குற்றத்துக்காக 26 வயதுடைய முன்னாள் ஐ.டி. ஊழியரான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 24 லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜெஸ்ஸி அகர்வால், நொய்டாவைச் சேர்ந்தவர், படித்து முடித்து பெங்களூருவில் பணியாற்றி வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின்போது வேலை பறிபோனது. தொடர்ந்து வேலை கிடைக்காததால், லேப்டாப்புகளை திருடுவதென முடிவெடுத்தார்.

பணியாற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் தங்கி, அங்கிருந்து லேப்டாப்புகளை திருடி, சொந்த ஊரில் உள்ள சில சந்தைகளில் அதனை விற்று பணம் சம்பாதித்துவந்துள்ளார். நல்ல பணம் வந்ததால், முழு நேர திருடியாகவே மாறினார்.

தங்கும் விடுதிகளில் ஆளில்லாத அறைகளுக்குள் நுழைந்து, அங்கு சார்ஜ் போட்டு வைத்திருக்கும் லேப்டாப்புகளை இவர் திருடி வந்துள்ளார். இந்த நிலையில்தான், தங்கும் விடுதியில் இருந்து அடிக்கடி லேப்டாப் திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரினைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை நடத்தி ஜெஸ்ஸியை கைது செய்தனர். அவரிடமிருந்து 24 லேப்டாப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர் பல காலமாக இதனை பல்வேறு விடுதிகளில் செய்து வந்ததும், தங்கும் விடுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com