கோலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கே.வி.கௌதம்!

பெரும் குழப்பத்துக்கு மத்தியில், கோலார் தொகுதியில் கௌதத்தை வேட்பாளராக அக்கட்சி தேர்வு செய்துள்ளது.
கோலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கே.வி.கௌதம்!

கோலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கே.வி. கெளதமை அக்கட்சி அறிவித்துள்ளது.

பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கௌதம் உள்ளார். இவர் பெங்களூரு முன்னாள் மேயர் கேவிஜய் குமாரின் மகன் ஆவார்.

கோலார் தொகுதியில் ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கர்நாடக உணவு அமைச்சர் கே.எச். முனியப்பா ராஜிநாமா செய்யப்போவதாகக் கூறிவந்த நிலையில் கோலாரில் அதிருப்தி நிலவி வந்தது.

முனியப்பா தனது மருமகன் சிக்க பெத்தண்ணாவை கோலாரில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய நிலையில், அமைச்சர் எம்.சி.சுதாகர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பெத்தண்ணாவுக்கு சீட்டுக் கொடுத்தால் முழுவதுமாக ராஜினாமா செய்வதாக மிரட்டினர்.

இந்த குழப்பத்துக்கு மத்தியில், கோலார் தொகுதியில் கௌதத்தை வேட்பாளராக அக்கட்சி தேர்வு செய்துள்ளது.

பாஜக கோலார் தொகுதியை அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு ஒதுக்கி, எம்.மல்லேஷ் பாபுவை வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com