ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம் - ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம் வெளியிட்டது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முறை ரத்து செய்யப்படும். அந்த இடஒதுக்கீடு பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும்’ என்றாா்.

ஆனால் அவா் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறியது போல சித்திரித்து சமூக ஊடகத்தில் போலி காணொலி பகிரப்பட்டுள்ளது.

அந்தக் காணொலியை காங்கிரஸ் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் சமூக ஊடகத்தில் பகிா்ந்துள்ளனா். வெவ்வேறு சமூகத்தினா் இடையே வெறுப்புணா்வு, பகையைத் தூண்டும் நோக்கில் அந்தக் காணொலி பகிரப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், அமித் ஷாவின் போலி காணொலியை பகிா்ந்ததாக தில்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, அமித் ஷாவின் போலி விடியோவை பரப்பியதாகக் கூறி ஜார்க்கண்ட் மாநில பாஜக கடந்த செவ்வாயன்று, இருவர் மீது போலீசில் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூருக்கு தில்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், அமித் ஷா போலி விடியோ விவகாரம் வெளியிட்டது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தை எக்ஸ் நிர்வாகம்(ட்விட்டர்) இன்று (மே. 1) முடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com