”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? எனக் கேட்ட காங்கிரஸுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தனர்
”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்
படம் | பிடிஐ

டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? எனக் கேட்ட காங்கிரஸுக்கு மக்கள் தேர்தலில் சரியான பதிலடி கொடுத்தனர் என பிரதமர் மோடி காங்கிரஸை விமர்சித்துள்ளார்.

குஜராத்தின் பானஸ்கந்தாவில் இன்று(மே.1) நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், காங்கிரஸுக்கு தேர்தலில் சரியான பதிலடியை இந்த நாடு அளித்தது.

ஒரு காலகட்டத்தில், நாடாளுமன்றத்தில் 400 இடங்களை தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ், 40 இடங்களுக்குள் சுருங்கிப் போனது. அவர்கள் 2019 இல் பாடம் கற்கவில்லை, அவர்களால் முக்கிய எதிர்க்கட்சியாக கூட ஆக முடியவில்லை” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com