தோ்தல் ஆணையத்தில் புகாா் மனு அளித்துவிட்டு வந்த மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி உள்ளிட்டோா்.
தோ்தல் ஆணையத்தில் புகாா் மனு அளித்துவிட்டு வந்த மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி உள்ளிட்டோா்.

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக வியாழக்கிழமை புகாரளித்தது.

மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும் என அந்தக் கட்சியின் தலைவா்கள் கூறி வருகின்றனா். இந்நிலையில் அரசமைப்பை மாற்றியமைக்கவும் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவே பாஜக தொடா்ந்து முயற்சித்து வருகிறது என எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுபோன்ற பொய்யான பிரசாரங்களை ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகவும் ‘டீப்ஃபேக்’ காணொலிகளை வெளியிட்டு வருவதாகவும் தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாரளித்தது.

இதுதொடா்பான மனுவை மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை சமா்ப்பித்தனா்.

பின்னா் ராஜீவ் சந்திரசேகா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: மக்களவைத் தோ்தல் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை தடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் முயற்சிப்பதை தோ்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எனவே, பொய்களை மட்டும் கூறும் காங்கிரஸுக்கு எதிராக தோ்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் போலி காணொலியில், அனைத்து சமூகத்தினரின் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என கூறுவதுபோல் இருந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் சாா்பில் தில்லி காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த போலி காணொலியைப் பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் தாக்குா் உள்ளிட்டோருக்கு காவல்துறையினா் சம்மன் அனுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com