கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் உறுதியளித்துள்ளது.

கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம் என அதன் தயாரிப்பு நிறுவனம் லண்டம் நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி தொடா்பாக மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கோவேக்ஸின் பாதுகாப்பானது என பாரத் பயோடெக் விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறுகிய காலத்துக்கானதாக இருந்தாலும், நோயாளியின் பாதுகாப்பு மீதான அதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பதை பாரத் பயோடெக் குழு நன்கு அறிந்திருந்தது. எனவே, கோவேக்ஸின் உள்பட எங்கள் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்புக்கு முதன்மையான கவனம் செலுத்தி, உருவாக்கப்படுகிறது.

உரிமம் பெறும் செயல்முறையின் ஒரு பகுதியாக 27,000 தளங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகத்தாலும் இத்தடுப்பூசி ஆய்வு செய்யப்பட்டது. தடுப்பூசியின் தயாரிப்பு சுழற்சி முழுவதும் மருந்தியல் பாதுகாப்பு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் கரோனா நோய்த் தடுப்புத் திட்டத்தில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட ஒரே கரோனா தடுப்பூசி கோவேக்ஸின் மட்டுமே ஆகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com