மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மேல்முறையீடு!

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதுள்ளார் .
மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது.

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பிப்ரவரி 28, 2023 அன்று தில்லி அமைச்சரவையிலிருந்து சிசோடியா ராஜிநாமா செய்தார்.

அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தில்லி ரோஸ் அவென்யூ கோர்டில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் ஏப்ரல் 30 நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்குவதற்கான சூழல் தற்போது சரியாக இல்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, தில்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா இன்று மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com