இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் உயர்வு
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: நாட்டின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, ஏப்ரல் மாதத்தில் 7.41 சதவிகிதம் உயர்ந்து, 7.86 கோடி டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் நிலக்கரி உற்பத்தியானது 73.26 மில்லியன் டன்னாக இருந்தது.

2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.869 கோடி டன் எட்டியது என்று நிலக்கரி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதத்தில், கோல் இந்தியா லிமிடெட் 6.178 கோடி டன் உற்பத்தியை செய்தது. இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.31 சதவிகித வளர்ச்சி ஆகும். அதே வேளையில் இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் இது 5.757 கோடி டன்னாக இருந்தது.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவிகிதத்தை கோல் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com