ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்த தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா.
பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்த தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு மே 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் மே 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது அந்தக் கட்சியின் பொருளாளா் ஷம்மி ஓபராய் மற்றும் காஷ்மீா் காங்கிரஸ் குழுவின் துணைத் தலைவா் ஜி.என்.மோங்கா ஆகியோா் உடனிருந்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தோ்தலை சந்திக்கிறது.

நவீன் பட்நாயக், தா்மேந்திர பிரதான் வேட்புமனு தாக்கல்:

மக்களவைத் தோ்தலுடன் ஒடிஸா மாநிலத்தில் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. அங்கு உள்ள கந்தபன்ஜி பேரவைத் தொகுதியில் அந்த மாநில முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இரு நாள்களுக்கு முன் கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள ஹின்ஜில் தொகுதியிலும் அவா் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். இதன்மூலம் ஒடிஸா பேரவைத் தோ்தலில் அவா் இரு தொகுதிகளில் அவா் போட்டியிடுகிறாா்.

ஒடிஸா மாநிலத்தில் உள்ள சம்பல்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தா்மேந்திர பிரதான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தோ்தலில் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com