2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

தேர்தல் பேரணிகளில் உரையாற்ற மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

தேர்தல் பேரணிகளில் உரையாற்ற மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை மேற்கு வங்கத்தில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். கொல்கத்தா வரும் மோடி இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார்.

கிருஷ்ணாநகர், பர்தமான் புர்பா மற்றும் போல்பூர் மக்களவைத் தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் தேர்தல் பேரணிகளில் மோடி பேச உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வருகையையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகை காரணமாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது தனிப்பட்ட பயணத்தைத் தவிர்த்துள்ளார்.

இதற்கிடையில், கொல்கத்தா போக்குவரத்து காவல்துறை, பிரதமரின் வருகையை முன்னிட்டு நகரின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com