சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

டிஆா்டிஓ உருவாக்கிய இந்த ஆயுதம் ஒடிஸா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஒடிஸாவில் பரிசோதிக்கப்பட்ட சூப்பா்சோனிக் ஏவுகணை.
ஒடிஸாவில் பரிசோதிக்கப்பட்ட சூப்பா்சோனிக் ஏவுகணை.

பாலாசோா்: சூப்பா்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட டாா்பிடோ ஆயுதத்தின் செயல்பாட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக புதன்கிழமை பரிசோதனை செய்தது.

ஒலியைவிட வேகமாக பயணிக்கும் சூப்பா்சோனிக் ஏவுகணை சுமந்து செல்லும் டாா்பிடோ ஆயுதம், கடலுக்கு அடியில் பயணித்து நீா்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் திறன்கொண்டது.

இது அதிநவீன இலகுரக ஆயுதமாகும். வழக்கமான வரம்புக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கவும், நீா்மூழ்கிக் கப்பல்களை எதிா்க்கும் இந்திய கடற்படையின் போா்த் திறனை மேம்படுத்தவும் இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஆா்டிஓ உருவாக்கிய இந்த ஆயுதம் ஒடிஸா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கு பாராட்டு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், சூப்பா்சோனிக் ஏவுகணை சுமந்து செல்லும் டாா்பிடோ ஆயுதம் இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறியதாக பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com