மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

லாடக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 5 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் பாஜக மற்றும் காங்கிரஸின் மாற்று வேட்பாளா்கள், சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டன.

பாஜக வேட்பாளா் தாஷி கியால்சன், காங்கிரஸ் வேட்பாளா் செரிங் நம்க்யால் மற்றும் 3 சுயேட்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட செரிங் நம்க்யால் வெற்றி பெற்று லடாக் தொகுதி எம்.பி.யானாா். 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பளிக்காத நிலையில், செரிங் நம்க்யால் காங்கிரஸில் இணைந்தாா். இதையடுத்து, அவரை லாடக் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.

பரப்பளவில் நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதியான லடாக்கில் 5-ஆவது கட்டமாக மே 20-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com