பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

அசோக் கெலாட் (கோப்புப்படம்)
அசோக் கெலாட் (கோப்புப்படம்)

பாஜகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளால் நாடு சலிப்படைந்துள்ளதாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

அசோக் கெலாட் செய்தியாளர்களுடன் சந்திப்பில்,

நாடு முழுவதும் மக்கள் பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகவும், வாக்கு சதவிகிதம் குறைவதற்கு முக்கிய காரணம் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. பாஜகவினர் வேட்பாளர்களை முன்னிறுத்தாமல் பிரதமர் மோடியின் பெயரிலேயே வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் இந்தியக் கூட்டணியின் பக்கம் திரும்புகின்றனர். ரே பரேலியில் ராகுல் போட்டியிட முடிவுசெய்த பின்னர், "டரோ மத், பாகோ மத்" (அச்சமடையாதீர், பயந்து ஓடாதீர்) என பிரதமர் மோடி கிண்டல் அடித்துள்ளார். ஆனால் அவரே தப்பி ஓடியவர்தான். அவருக்கும் வாராணசிக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது, அவர் ஏன் குஜராத்திலிருந்து வாராணசியில் போட்டியிடுகிறார்? என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியைப் பறித்துவிடும் என்ற அவதூறு கருத்துகளைக் கூறி வருகிறார். இது தேர்தல் நடத்தையை மீறுவதாகும். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடியும் பாஜகவும் தனது தேர்தல் பிரசாரத்தில் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் மதம், மத சின்னங்கள் மற்றும் மத உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும், அது எவ்வித தண்டனையும் இன்றி நடந்து வருவதாகவும் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com