”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

”தொலைக்காட்சியில் கறை படிந்த ஆடையுடன் பிரதமரை பார்க்க முடியுமா?”
”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி
படம் | பிடிஐ

குஜராத்தின் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதிக்குட்பtட லகானியில், இன்று(மே. 4) தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ”எனது சகோதரரை இளவரசர் எனக் குறிப்பிடும் மோடி, அரண்மனையில் மன்னாதி மன்னைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்” எனக் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

குஜராத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை இளவரசர் எனக் குறிப்பிட்டதோடு, ராகுலை பிரதமராக்க பாகிஸ்தான் விருப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி அளித்துள்ள பிரியங்கா காந்தி, ”இந்த இளவரசர் தான்(ராகுல் காந்தி), காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,000 கி.மீ தூரம் நடந்தே சென்று, மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், என அனைத்து தரப்பினரின் பிர்சனைகளை தீர்ப்பது எப்படி என்பதை கேட்டறிந்தார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் இல்லத்தில் ராஜ வாழ்க்கை வாழும் பிரதமர் பிரதமரை, தொலைக்காட்சியில் கறைபடிந்த ஆடையுடன் பார்க்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வகுத்தெடுத்த தலைமுடியுடன் ராஜ தோரணையில் காட்சியளிப்பவர் மோடி, ஆகவே, அவர் எப்படி மக்களின் கடின உழைப்பை புரிந்துகொள்வார்? விலைவாசி உயர்வால் மக்கள் எதிர்கொள்ளும் பிர்சனைகளை எப்படி புரிந்துகொள்வார்? என சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, மக்களின் உரிமைகளை ஒடுக்கியதே, கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் மிகப்பெரிய சாதனை.

உங்களை(குஜராத் மக்களை) பயன்படுத்திக் கொண்டு, உங்கள் ஆதரவால், அதிகாரம், பெயர், மதிப்பை சம்பாதித்துவிட்டு பிரதமராகிக் கொண்டு, இப்போது உங்களை விட்டு அவர் விலகிச் சென்றுவிட்டதார்.

இந்தியாவில் தேர்தல் நடைபெறுகறது, இப்போது பாகிஸ்தானை அவர் குறிப்பிட்டு, கீழ்த்தரமானவற்றை பேசி வருகிறார். ஏராளமான பொய்களை பேசி வருகிறார்.

55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உங்களிடமிருந்து நகைகளைப் பறித்ததா? மக்கள் எந்தளவிற்கு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கு, அரசு சொத்துக்கள் வழங்கப்பட்டுகின்றன. அரசின் அனைத்துக் கொள்கைகளும் கோடீஸ்வரர்களுக்காகவே வகுக்கப்படுகின்றன.

அரசு வேலைகளை தனியார்மயமாக்குதல் மூலம் இடஒதுக்கீடு முறைக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவக்குவதை விட்டுவிட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மோடி.

மக்களுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரித்து, உலகின் பணக்கார அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com