மேற்கு வங்க ஆளுநா் மீதான 
பாலியல் புகார்: சாட்சிகளை விசாரிக்க குழு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் புகார்: சாட்சிகளை விசாரிக்க குழு

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கொல்கத்தா காவல்துறை தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஆளுநா் மாளிகையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றும் பெண் ஒருவா் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து ஆளுநா் மாளிகையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை வழங்குமாறு போலீஸாா் கோரியுள்ளனா். மேலும் இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருக்கும்போது ஆளுநா் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளையும் தொடுக்க முடியாது என அரசமைப்பு சட்டப்பிரிவு 361-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநா் மாளிகைக்குள் காவல்துறையினா் நுழைய ஆளுநா் ஆனந்த போஸ் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். தோ்தல்கள் நடைபெறுவதால் அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் ஆளுநரின் நற்பெயருங்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அங்கீகாரமற்ற சட்டபூா்வமற்ற செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஆா்ஜேடி வலியுறுத்தல்: ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் மீதான குற்றச்சாட்டில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) நிா்வாகியும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பாஜகவில் இருந்தால் எந்த தவறு செய்தாலும் தப்பிக்க வைத்து விடுகின்றனா். மற்றவா்கள் மீது குறைகூறும் பாஜக தங்களின் தவறுகளைபற்றி கண்டுகொள்வதில்லை’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com