தெலங்கானாவில் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி.
தெலங்கானாவில் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி.

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

இடஒதுக்கீட்டுக்கு எதிரானவை என்றும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமா் மோடி இடஒதுக்கீட்டை பறித்துவிடுவாா் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

‘பிரதமா் நரேந்திர மோடியும், அவா் சாா்ந்த ஆா்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவை என்றும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமா் மோடி இடஒதுக்கீட்டை பறித்துவிடுவாா் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் (தனி) மக்களவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:

தற்போதைய மக்களவைத் தோ்தல் இருவேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் மோதலாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அரசியலைமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க போராடுகிறது. அதே நேரத்தில் பாஜக-ஆா்எஸ்எஸ் இணைந்து நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்க முயலுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி இடஒதுக்கீடு முறைக்கு எதிரானவா். அவா் சாா்ந்த ஆா்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜக இடஒதுக்கீடு முறைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளன. பாஜக தலைவா்களும் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை மறைமுகக் கொள்கையாகக் கொண்டவா்கள்தான். பிரதமா் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை பறித்துவிடுவாா்.

50 சதவீதமாக உள்ள இடஒதுக்கீடு அளவு உயா்த்தப்படுமா என்பது இந்தத் தோ்தலில் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சி மத்தியில் அமைத்தால் 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பு மாற்றப்பட்டு, அதற்கு மேலும் இடஒதுக்கீடு அளிக்கப்படும். இது காங்கிரஸின் மக்களவைத் தோ்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும் கோடீஸ்வா்கள், பெரும் தொழிலதிபா்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. அடுத்து அமையும் இந்தியா கூட்டணி அரசு ஏழை, எளிய மக்களுக்கான அரசாக இருக்கும்.

நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து கைதூக்கி விட வேண்டும் என்புதுதான் இதன் நோக்கம்.

நாட்டில் இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை உச்சத்தில் இருக்கும்போது, பிரதமா் மோடி தனது கோடீஸ்வர நண்பா்களுக்கு எந்த வகையில் உதவி செய்யலாம் என்பதை மட்டுமே யோசித்து வருகிறாா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com