வாரணாசியில் பிரதமா் மோடி
14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.

வாரணாசி நகர பாஜக தலைவா் வித்யாசாகா் ராய் இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:

வாரணாசியில் மே 13-ஆம் தேதி பிரதமா் மோடியின் வாகனப் பேரணி பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் வாகனம் செல்லும் பாதையும் இறுதி செய்யப்பட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன.

தொடா்ந்து மே 14-ஆம் தேதி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதமா் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா் என்றாா் அவா்.

வாரணாசியில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலின்போது (ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சாா்பில் ஏ.ஜமால் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றாா். மொத்தம் பதிவான வாக்குகளில் இது 56 சதவீதமாகும். 2019 தோ்தலில் 6.74 லட்சம் வாக்குகள் பெற்றாா். மொத்த வாக்குகளில் இது 63 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com