கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

மனைவியுடன் நடிகர் ஷிவராஜ்குமார்
மனைவியுடன் நடிகர் ஷிவராஜ்குமார்படம் | இன்ஸ்டாகிராம்

கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் டாக்டர் ஷிவராஜ்குமார், தனது மனைவிக்கு ஆதரவாக ஷிவமொகா தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

கன்னடம் மட்டுமன்றி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஷிவராஜ்குமார். 'கன்னட சூப்பர் ஸ்டார்’ என்றே ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’ஜெயிலர்’ படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

ஷிவராஜ்குமார் மனைவி கீதா ஷிவராஜ்குமார், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஷிவமொகா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்வு பெறும் நிலையில், தனது மனைவியுடன் சேர்ந்து ஷிவமொகா மக்களவை தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் ஷிவராஜ்குமார்.

வாக்கு சேகரிப்பதற்காக சென்ற ஷிவராஜ்குமாரை காண, ஏராளமான மக்களும், அவரது ரசிகர்களும் திரண்டிருந்ததையும் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com