‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பாலிவுட்டில் அமிதாப்புக்கு அடுத்து மதிக்கப்படும் நபர் - கங்கனாவின் கருத்து
மக்களுடன் நிற்கும் கங்கனா ரணாவத்
மக்களுடன் நிற்கும் கங்கனா ரணாவத்ANI

ஹிமாச்சல் பிரதேசத்தில் மண்டி மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கனா ரணாவத்.

சமீபத்தில் அவர் பேசுகிற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ட்ரெண்டாகி வருகின்றன.

பாலிவுட் நடிகையான கங்கனா, அமிதாப் பச்சனுக்கு அடுத்து அதிகம் மதிக்கப்படும் நபர் தான் என பேசிய விடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அதில் கங்கனா, “நான் ராஜஸ்தான் போனாலும், மேற்கு வங்கம் போனாலும் தில்லி போனாலும் மணிப்பூர் போனாலும் ஏராளமான அன்பும் மரியாதையும் எனக்குக் கிடைக்கிறது. அமிதாப் பச்சனுக்கு அடுத்து இத்தனை அன்பும் மரியாதையும் கிடைக்கிற பாலிவுட் சினிமா நபர் நான்தான் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனா பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் உடன் தன்னை ஒப்பிட்டுக்கொள்வதை சமூக வலைத்தளங்களில் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சினிமா எனப் பார்த்தால் 2016-க்குப் பிறகு கங்கனா நடித்த 15 படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகே பாஜகவில் சேர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் கங்கனா.

இந்த விடியோ பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com