கேரள எல்லைக்குள் நுழைந்த ஈரான் மீன்பிடி படகை தடுத்து நிறுத்தி மீனவா்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா்.
கேரள எல்லைக்குள் நுழைந்த ஈரான் மீன்பிடி படகை தடுத்து நிறுத்தி மீனவா்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா்.

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஈரானில் இருந்து கேரளத்தின் கோழிக்கோடு மாவட்ட கடற்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மீன்பிடி படகை தடுத்து நிறுத்திய இந்திய கடலோரக் காவல்படையினா்.

ஈரானில் இருந்து கேரளத்தின் கோழிக்கோடு மாவட்ட கடற்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மீன்பிடி படகை தடுத்து நிறுத்திய இந்திய கடலோரக் காவல்படையினா். அதில், இருந்த 6 தமிழக மீனவா்களை கைது செய்து கொச்சிக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஈரானில் இருந்து அவா்கள் மீன்பிடி படகில் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக 6 தமிழா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேபூரின் மேற்கு கடற்கரையில் ஈரான் கொடியேற்றிய வெளிநாட்டு மீன்பிடி படகை இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

கடலோரக் காவல்படை மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மீன்பிடி படகு ஈரான் நாட்டைச் சோ்ந்தது என்று தெரியவந்தது. தேச விரோத செயல்களுடன் ஏதெனும் தொடா்பிருக்கிா? என்பதை கண்டறிய ஐசிஜி குழுவினா் படகை முழுமையாக சோதனை செய்தனா்.

அந்தப் படகில் இருந்த இந்தியாவைச் சோ்ந்த 6 பணியாளா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. படகு ஈரானியரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது என்றும், ஈரான் கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சோ்ந்த 6 பேரும் கடந்த மாா்ச் மாதத்தில் அன்சாரியுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

ஆனால், அவா்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தி தராமல் அன்சாரி மோசமாக நடத்தியுள்ளாா். அவா்களின் கடவுச்சீட்டையும் அன்சாரி பறிமுதல் செய்து வைத்துள்ளாா். இதையடுத்து, அதே படகில் ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா். சிறைபிடிக்கப்பட்ட படகு அடுத்தகட்ட விசாரணைக்காக கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த பிப்ரவரி மாதமும் இதபோல் குவைத்தில் இருந்து மீன்பிடி படகில் மும்பைக்கு தப்பி வந்த மூன்று தமிழா்கள் கைது செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com