மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு
ANI

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு திங்கள்கிழமை செயலிழக்க செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு திங்கள்கிழமை செயலிழக்க செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மலைகள் அதிகமுள்ள கட்சிரோலி மாவட்டத்தின் திபாகாட் பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாக காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையினா் (பிடிடிஎஸ்), விரைவு நடவடிக்கை குழு மற்றும் சி60 மத்திய பாதுகாப்புப் படையினா் (சிஆா்பிஎஃப்) திபாகட் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 9 வெடிகுண்டுகள் (ஐஇடி), 6 பிரஷா் குக்கா்களில் நிரப்பப்பட்டிருந்த வெடிபொருள்கள் மற்றும் டெட்டனேட்டா்களை கைப்பற்றி பின்னா் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனுடன் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பை, போா்வைகள் மற்றும் மருந்துகள் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com