இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகள் இடம் பிடித்துள்ளன?
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை(மே. 5), 17 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் எந்த பகுதிகளிலெல்லாம் அதிக வெயில் பதிவாகியுள்ளது என்ற விவரத்தை இந்திய வானிலை துறை வெளியிட்டுள்ளது. அதில், முதல் பத்து இடங்களில் பரமத்தி வேலூர்(கரூர் மாவட்டம்) இடம்பிடித்துள்ளது.

அதிக வெப்பம் பதிவான இடங்கள் (டிகிரி செல்சியஸ்):

  1. சாராய்கேலா (ஜார்க்கண்ட்) - 45.1

  2. கடப்பா (ஆந்திர பிரதேசம்) - 44.8

  3. பனாகர் (மேற்கு வங்கம்) - 44.5

  4. நிஸாமாபாத் (தெலங்கானா) - 44.4

  5. கான்பூர் (உத்தர பிரதேசம்) - 44.3

  6. ஜார்சுகுடா (ஒடிஸா) - 44.0

  7. பரமத்தி வேலூர் (தமிழ்நாடு) -43.8

  8. ரெண்டாசிந்தலா (ஆந்திர பிரதேசம்) - 43.6

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): பரமத்தி வேலூரில் 110.66, ஈரோடு - 110.12, திருப்பத்தூா் - 107.96, வேலூா் - 107.78, மதுரை விமானநிலையம் - 107.24, திருத்தணி, திருச்சி (தலா) - 107.06, பாளையங்கோட்டை, சேலம் (தலா) - 105.8, தஞ்சாவூா், மதுரை நகரம் (தலா) - 104, சென்னை மீனம்பாக்கம் - 102.92, தருமபுரி - 101.3, கோவை - 100.76, நாகப்பட்டினம் - 100.58, பரங்கிப்பேட்டை - 100.4.

கோடை மழைக்கு வாய்ப்பு

ஒருபுறம் வெயில் வாட்டி வதைத்தாலும், தமிழகத்தில் நாளை(மே 07) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை எச்சரிக்கை

அடுத்த 2 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதற்கடுத்த 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.

மே 10 வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41-43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 - 38 டிகிரியும் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com