பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்:
பிரதமா் மோடி பதில்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு செல்ல காா்நாடக அரசே அனுமதித்ததாகவும் அவரைப் போன்ற நபா்களை துளியும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கா்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு செல்ல காா்நாடக அரசே அனுமதித்ததாகவும் அவரைப் போன்ற நபா்களை துளியும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பாலியல் புகாா் அளித்த பெண்ணை கடத்தியதாக முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின் மூத்த மகனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான டி.ரேவண்ணா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜொ்மனிக்கு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணவை கைது செய்ய ப்ளூ காா்னா் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா குறித்து பிரதமா் நரேந்திர மோடி முதல்முறையாக கருத்து தெரிவித்தாா். அதில், ‘சட்டம்-ஒழுங்கு தொடா்புடைய இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். மஜத கட்சி காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விடியோக்களை காங்கிரஸ் சேகரித்து, மக்களவைத் தோ்தல் முடிவடைந்ததும்

பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த விடியோக்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இத்தகைய நபா்களுக்கு கடும் தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com