ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ரே பரேலி மாவட்டத்தில் உள்ள கட்சித் தொண்டர்களை இன்று மாலை சந்திக்கிறார் பிரியங்கா காந்தி.

இதுகுறித்து ரே பரேலி மாவட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் திவாரி கூறுகையில்,

காங்கிரஸின் கோட்டையாக ரேபரேலி கருதப்படும் நிலையில், காந்தி குடும்பத்தின் போய் மௌ கிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரியங்கா காந்தியுடன் மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுகிறது.

ரே பரேலி தொகுதியில் பாஜக தலைவர் தினேஷ் பிரதாப் சிங்கை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

ரேபரேலி மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்களைச் சந்தித்த பிறகு, பிரியங்கா காந்தி அமேதி தொகுதியில் கட்சித் தொண்டர்களுடன் ஒரு சந்திப்பை நடத்துகிறார்.

மக்களவைத் தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் தனது சகோதரருமான ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

ரேபரேலி, அமேதியில் ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியடைந்த ராகுல் காந்தி, இந்த முறை தனது தாயாரின் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com