ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் குமாா் மிஸ்ரா திங்கள்கிழமை பதவியேற்றாா்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் குமாா் மிஸ்ரா திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதன்மூலம் ஜிஎஸ்டி சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் நிறுவப்பட்ட ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் (ஜிஎஸ்டிஏடி) முழுவீச்சில் செயல்படத் தொடங்கியது.

இதுதொடா்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்’ என தெரிவிக்கப்பட்டது.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த மிஸ்ரா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான தேடுதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீா்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம், 2017-இன் கீழ் ஜிஎஸ்டிஏடி நிறுவப்பட்டது. இந்த தீா்ப்பாயம் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வதற்காக தொடங்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வை தில்லியிலும் கிளை அமா்வுகளை நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சாா்ந்த பிரச்னைகளை தீா்ப்பதுடன் உயா்நீதிமன்றங்களில் ஜிஎஸ்டி தொடா்பான வழக்குகளின் சுமையையும் குறைக்க இந்த தீா்ப்பாயம் உதவுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com