தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

சுபாலில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணியிலிருந்த தலைமை அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

பிகாரில் சுபாலில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணியிலிருந்த தலைமை அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் சைலேந்திர குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிகாரின் சுபாலில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com