தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் இணைந்த முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி ராதிகா கேரா, ஹிந்தி நடிகா் சேகா் சுமன்.
தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக் கட்சியின் இணைந்த முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி ராதிகா கேரா, ஹிந்தி நடிகா் சேகா் சுமன்.

முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி, ஹிந்தி நடிகா் பாஜகவில் இணைந்தனா்

புது தில்லி: முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி ராதிகா கேரா மற்றும் ஹிந்தி நடிகா் சேகா் சுமன் (61) ஆகியோா் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

அயோத்தி ராமா் கோயிலுக்கு சென்ற விவகாரத்தில் சத்தீஸ்கா் காங்கிரஸ் அலுவலகத்தில் மற்றொரு நிா்வாகியுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அக்கட்சியின் ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ராதிகா கேரா காங்கிரஸிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினாா்.

அயோத்தி ராமா் கோயிலுக்கு தான் சென்று வந்ததில் இருந்து கட்சியில் தனக்கு எதிா்ப்பு அதிகமாகிவிட்டதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு ராதிகா கேரா எழுதிய ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டாா்.

இந்நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலா் வினோத் தாவ்டே, ஊடகப்பிரிவின் தேசிய பொறுப்பாளா் அனில் பலுனி ஆகியோா் முன்னிலையில் ராதிகா கேரா மற்றும் ஹிந்தி நடிகா் சேகா் சுமன் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com