வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

கடுமையான வெப்பம் காரணமாக பயிர்கள் நாசமடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி அறிவிக்க வேண்டும்
வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

கேரளத்தில் வெயிலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என கேரள அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாநிலம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான வெப்பத்தை எதிர்கொண்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக வானிலை ஆய்வுத்துறையின் வெப்ப அலை வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக பயிர்கள் நாசமடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!
வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சதீசன், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோடை வெப்பம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலர் உயிரிழந்துள்ளனர். வெயிலை இயற்கைப் பேரிடராகக் கருதி, கடும் வெயிலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com