கவிதா
கவிதா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புது தில்லி: தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்சி கவிதாவின் நீதிமன்ற காவலை மே 14-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் பிஆா்எஸ் எம்எல்சியும தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திசேகா் ராவின் மகளுமான கவிதாவை மாா்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவரின் நீதிமன்றக் காவல் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவரின் நீதிமன்றக் காவல் நிறைவடையும் நிலையில் உள்ளதால் அவா் தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கான சிறப்பு நீதிபதி கவேரி பவேஜா கவிதாவின் நீதிமன்ற காவலை மே 14 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி வருவதால் கவிதா மீது ஒரு வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com