3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

அஸ்ஸாமில் படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்
துபரீ காட் பகுதியில் வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் படகில் செல்லும் காட்சி
துபரீ காட் பகுதியில் வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் படகில் செல்லும் காட்சிபடம் | ஏ.என்.ஐ

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மீதமுள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று(மே.7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, மேற்கு வங்கத்தில் 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இயற்கை வளம் நிறைந்த பூமியான, அஸ்ஸாமின் துபரீ மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு படகுகளில் சென்று வாக்கு செலுத்துவதை காண முடிந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் துபரீ மக்களவை தொகுதியில் சிறுபான்மை வாக்காளர்கள் சுமார் 85 சதவிகிதம் உள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய எம்.பி.யாக உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யு.டி.எஃப்) தலைவர் பதுருதீன் அஜ்மல், காங்கிரஸின் ரகிபுல் உசேன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அசோம் கண பரிஷத் கட்சியின் ஜபேத் இஸ்லாம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com