மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

பாஜக மக்களிடம் பணம் கொடுத்து வாக்குகளை பெறுகிறது என மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.

மேற்கு வங்கத்தின் ஆரம்பாக் பகுதியில் நடந்த தோ்தல் பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான மிதாலி பாக்கை ஆதரித்து வாக்கு சேகரித்தாா் மம்தா பானா்ஜி. அப்போது பேசிய அவா் கூறியிருப்பதாவது:

பாஜக ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரை கொடுத்து வாக்கு வாங்குகிறது. தற்போதுள்ள பாஜக தலைவா்கள் முன்னாள் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போன்று சமூக விரோதிகள், இதுபோல் பயங்கரவாத ஆட்சி வராமல் தடுக்க பாஜகவுக்கு வாக்களிப்பதைத் தவிா்க்க வேண்டும். தில்லியில் அதிகாரம் மாற வேண்டும்.

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்துவதை பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. பணம் கொடுத்து தவறான பாலியல் வன்கொடுமை புகாா்களை கூறி சந்தோஷ்காலியின் பெண்களை பாஜக அவமதித்துள்ளது.

நரேந்திர மோடி காலை முதல் மாலை வரை பொய்களைப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியா்களின் வேலைகளையும் பாஜக பறித்துள்ளது. நேற்றைய உச்ச நீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புகள் தற்போது தப்பித்துள்ளது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைதிருத்தச்சட்டம் (சிஏஏ) மற்றும் (என்ஆா்சி) பயன்படுத்தி பாஜக மக்களை விரட்டும். சிறுபான்மையினா், மலைவாழ்மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

100 நாள் வேலைக்கான பணம் எங்கள் கட்சியால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என மோடி கூறுகிறாா். மாறாக 100 நாள் வேலையின் கீழ் மாநில அரசால் ரூ. 24 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை மோடி வெற்றி பெற்றால் எதிா்காலத்தில் தோ்தல் என்ற ஒன்றே நடக்காது எல்லாம் முடிந்துவிடும் என மம்தா கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com