பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

கால்வாயில் பிறந்து நான்கு நாளே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு...
baby
baby

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் உள்ள ஒரு கால்வாயில் பிறந்து நான்கு நாளே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை இரவு கல்வா பகுதியில் உள்ள வடிகாலில் குழந்தை கிடப்பதை அவ்வழியாக சென்ற ஒருவர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் குழந்தையை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிறந்த குழந்தையைக் கால்வாயில் போட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கல்வா போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com