காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

ரே பரேலி மக்களுடனான 100 ஆண்டுக்கால காங்கிரஸ் உறவு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது
காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

ரே பரேலி மக்களுடனான தனது கட்சியின் 100 ஆண்டுகள் பழமையான உறவு ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரே பரேலி ராகுல் காந்தியின் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்த பிரியங்கா காந்தி வந்துள்ளார். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர் மற்றும் ரே பரேலி மக்களின் உற்சாகம் பார்க்கவேண்டி ஒன்றாகும்.

ரே பரேலி மக்களுடனான 100 ஆண்டுக்கால காங்கிரஸ் உறவு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது மற்றும் தொகுதி மக்கள் காங்கிரஸ் தலைமைக்கு மீண்டும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

இன்று பச்ரவான், ரே பரேலியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பிரசாரங்களில் எனது குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பேன் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரியங்கா காந்தி ரே பரேலியின் பச்ரவான் சட்டமன்றத் தொகுதியில் உள்ள துல்வாசா, மஹாராஜ்கஞ்ச், ஹலோர், பவானிகர், கூடா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

கடந்த 2019ல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரே பரேலியில் அமோக வெற்றி பெற்றார்.

மக்களவைத் தேர்தலுக்கு பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com